பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்களை சேதமாக்கும் காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல வன காவலர்களுக்கு அதிகாரம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சென்னை : பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு, வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கிய அரசின் நடவடிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பூலத்துாரை சேர்ந்த சமூர் ஆர்வலரான, ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:கொடைக்கானல் மலைப்பகுதியில், விவசாயம் செய்து வருகிறோம். காட்டுப் பன்றிகள், பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.கூட்டம் கூட்டமாக வந்து, பயிர்களை நாசப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில், காட்டுப் பன்றிகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருதி, அவற்றை சுட்டுக் கொல்ல, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, இங்கும், காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், பி.ராஜா, மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், வனத்துறை சார்பில், கூடுதல் பிளீடர், எஸ்.பிரபு, அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர், கமலேஷ் கண்ணன் ஆஜராகினர்.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: வனத்துறை 2020 மே, ஜூன் மாதங்களில் பிறப்பித்த உத்தரவுகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறையில் பணியாற்றும் ஒன்பது அதிகாரிகள், வன காவலர்களுக்கு, விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அதிகாரம் அளிக்கப்படுவதாக, அந்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதில், நாங்கள் திருப்தி அடைகிறோம். விவசாய நிலங்களை பாதுகாக்க, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அகற்ற, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரசின் திட்டம் தொடரும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X