சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஒயிட் எம் - சாண்ட்' பெயரில் ஆற்று மணல் கடத்தல் அமோகம்

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 'ஒயிட் எம் சாண்ட்' என, போலி ஆவணங்கள் தயாரித்து, தினமும் 25 ஆயிரம் லோடு ஆற்று மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 'ஆன்லைன்' வாயிலாக, பொதுப்பணித்துறை ஆற்று மணலை விற்பனை செய்து வருகிறது. முறையாக பதிவு செய்தவர்கள், ஒரு லோடு மணல் பெற, ஐந்து முதல், 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், கருங்கற்களை ஆலைகளில் அரைத்து கழுவி தயாரிக்கப்படும், எம் - சாண்ட் மணலை பயன்படுத்த முன்வந்துள்ளன.இருப்பினும், குறைந்தபட்ச தேவைகளுக்கு கூட, ஆற்று மணல் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, சில மாவட்டங்களில் மட்டுமே, அதிகாரப்பூர்வ மணல் குவாரிகள் உள்ளன. ஆனால், திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், கடலுார், திருச்சி, கரூர், துாத்துக்குடி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆற்று மணல் திருட்டு, அமோகமாக நடந்து வருவதாக புகார் கூறப்படுகிறது.இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர், ஆர்.பன்னீர் செல்வம் கூறியதாவது:தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து, தினமும், 25 ஆயிரம் லோடுகள் வரை ஆற்று மணல் கடத்தப்படுகிறது.

லாரிகளை மடக்கி பிடித்து ஆய்வு செய்தால், கூழாங்கற்களை அரைத்து, கழுவி தயாரிக்கப்பட்ட, ஒயிட் எம் - சாண்ட் என்று போலி ஆவணங்கள் காட்டப்படுகின்றன.தமிழகத்தில் ஒயிட் எம் - சாண்ட் தயாரிக்கும் ஆலைகள் எதுவும் இருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல் இல்லை. இவ்வாறு, கடத்தப்படும் மணலில் பெரும்பகுதி, கேரளாவுக்கு விற்கப்படுகிறது.சென்னை போன்ற சில பகுதிகளுக்கு, கலப்படம் செய்யப்பட்டு, 3 யூனிட் கலப்பட மணல், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து, பொதுப்பணித் துறைக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் புகார் அளித்து விட்டோம்.

பிடிபடும் மணல் லாரிகளை ஆய்வு செய்து, உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். முதல்வர் தலையிட்டால் தான், இதற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
27-ஜூலை-202008:50:41 IST Report Abuse
Ramachandran Rajagopal சட்டவிரோத செயல்களால் சம்பாதிக்கும் பணத்தில் அனைவருக்கும் பங்குண்டு என்பதால் யாரும் அவற்றைத் தடுக்க முன்வரமாட்டார்கள். எங்கு புகார் செய்தாலும் ஒன்றும் நடக்காது. இதுதான் ஜனநாயக ஆட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X