பாதுகாப்பு உபகரணங்கள் ; கலெக்டர்களுக்கு கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் ; கலெக்டர்களுக்கு கடிதம்

Added : ஜூலை 26, 2020
Share

சென்னை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள், பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு, முக கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் போன்ற உபகரணங்களை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.ஆனால், சில மாவட்டங்களில், போதிய அளவில், ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த, களப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று, புகார் வருகிறது.

எனவே, மாநில பேரிடர் நிவாரண நிதி அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியின், உபரி நிதி அல்லது தொடர்புடைய திட்டங்களில், இருப்பில் உள்ள தொகையை பயன்படுத்தி, பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்து, களப் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.கொள்முதல் செய்யப்படும், அனைத்து பொருட்களும், மிகவும் தரம் வாய்ந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட அங்காடி விலைக்கு மிகாமல், குறைந்த விலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X