அமெரிக்க மக்களுக்கு ரூ.90 ஆயிரம் 'கொரோனா' நிதியுதவி திட்டம் தயார்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில், நாட்டு மக்களுக்காக, 74.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, ஒவ்வொருவருக்கும், தலா, 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 42 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 1.48 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே, மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் செய்து வருகிறது. கொரோனா நிவாரண நிதியுதவி திட்டம் குறித்து, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுச்சின், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸை நேற்று சந்தித்துப் பேசினார்.

பின், நிருபர்களிடம் ஸ்டீவன் நுச்சின் கூறியதாவது:கொரோனா நெருக்கடி காலத்தில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்காக, இரண்டாம் கட்ட நிதியுதவி தொகுப்பை அறிவிக்க இருக்கிறோம். இந்த திட்டம், 74.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானது. இதன்படி, அடுத்த மாதம், ஒவ்வொருவருக்கும், தலா, 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தனிநபர் வருமானத்தின் அடிப்படையில், இந்த நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, 74.7 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோருக்கு, நிதியுதவி செய்யப்படாது.இந்த திட்டத்திற்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் முழு ஆதரவு அளித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க மக்களுக்கு வேண்டியவை கிடைக்க வேண்டும் என்பதே, அவரின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X