பொது செய்தி

தமிழ்நாடு

வட்டியின்றி ரூ.50 ஆயிரம் கடன் டீ கடை உரிமையாளர்கள் கோரிக்கை

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'டீக்கடைகளுக்கு, வட்டி இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும்' என, சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

சங்கத்தின் தலைவர் ஆனந்தன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், நான்கு மாதமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆயிரக்கணக்கான டீக்கடைகளும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களும், கடை வாடகை கொடுக்க முடியாமலும், தங்களின் குடும்பத்தை காப்பாற்ற முடியாமலும் கஷ்டப்படுகின்றனர்.டீக்கடைகளில், சமூக இடைவெளியை பின்பற்றி, கடைக்கு உள்ளேயே, டீ கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். தற்போது 50 சதவீத டீக்கடைகள் பூட்டியே கிடக்கின்றன. கட்டட உரிமையாளர்கள், வாடகை தரும்படி நிர்பந்தம் செய்கின்றனர்.பூட்டிக் கிடந்த நான்கு மாதங்களுக்கு, வாடகையை பாதியாக குறைத்தோ அல்லது வருவாய் உள்ளபோது கொடுப்பதற்கோ, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

பூட்டிய டீக்கடைகள் திறக்க, பல ஆயிரம் ரூபாய் தேவை. எனவே, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், மாநகராட்சி வழியாக, டீக்கடை உரிமையாளர்களுக்கு, வட்டி இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202000:43:50 IST Report Abuse
தமிழ்வேல் பிரதமருக்கு எழுதுங்க. உங்கள பத்தி அவருக்குத்தான் நல்லா தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X