பொது செய்தி

இந்தியா

கார்கில் வெற்றி தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Kargil Vijay Diwas, Kargil day, Kargil War, India, Pakistan, கார்கில், வெற்றி தினம், கொண்டாட்டம்

புதுடில்லி: கார்கில் போர் வெற்றி தினம், நாடு முழுவதும் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் மலைப் பகுதியில், 1999ல், போர் நடந்தது.இந்த போர், 1999ம் ஆண்டு ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்து, நம் வீரர்கள் கார்கில் மலை உச்சியில், நம் மூவர்ணக் கொடியை பறக்க விட்டனர். இந்த போரில், நம் வீரர்கள், 500 பேர் வீரமரணம் அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 26ம் தேதி, கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்ட செய்தியில், ''கார்கில் போரின் போது, நம் மண்ணை காப்பதற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை, நாடும், நாட்டு மக்களும் எப்போது மறக்க மாட்டார்கள். கார்கில் போர் வெற்றி தினம், நம் வீர்ரகளின் துணிச்சலின் அடையாளம்,'' என, கூறியுள்ளார்.


latest tamil news


கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, டில்லியில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மலரஞ்சலி செலுத்தினார். ராணுவ அமைச்சருடன், முப்படை தளபதிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.

''கார்கில் போரில் எதிரிகளை துவம்சம் செய்து, விரட்டி அடித்து, துணிச்சலுடன் போராடிய வீரர்களை, இந்த நாடு பெருமிதத்துடன் நினைவுபடுத்துகிறது. ''பயமின்றி போராடிய வீரர்களை போற்றி வணங்குகிறேன்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
27-ஜூலை-202010:36:47 IST Report Abuse
sudharman கார்கில் போர் என்பது நமது பகுதிகளை நாம் பாகிஸ்தானிடம் இழந்து மீட்டது. மீட்டதற்கு வாழ்த்துக்கள் நன்றிகள். ஐநூறு பேர் உயிர் இழந்தணர். நமது பகுதிகளை இழந்ததற்கு யார் காரணம். உளவுத்துறை தோல்வி. ஆடு மெய்ப்பவர் சொல்லி பிறகு நமது ராணுவம் சென்று மீட்டது. எதனை நாட்ட்கள் போரிட்டு மீட்டோம். இது போதாக்குறைக்கு சவப்பெட்டி ஊழல் வேறு. நான் குத்தி காட்ட கூறவில்லை. இந்த தவறு ஏற்பட கூடாது என்று விரும்புகிறேன். நாம் அடித்தல் அவர்கள் துண்டை காணோம் என்ற வேகத்தில் ஓட வேண்டும். சில மாதங்கள் நீண்டதையே நான் விரும்பவில்லை. ஏறி மிதித்திருக்க வேண்டும். நமது ராணுவ செயல்பாடுகள் அவர்களை விட மெதுவாக இருந்தது. இதண் நடுவில் மற்ற நாடுகள் பிரஷர் வேறு. அவர்களாக பின் வாங்கினார். நாமாகவே முழுதும் அடித்து துரத்தவில்லை. அதுவும் வருத்தமே.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூலை-202009:37:10 IST Report Abuse
RajanRajan உயிர் தியாகம் செய்த கார்கில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலிகள் உரித்தாகுக.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-ஜூலை-202004:25:54 IST Report Abuse
blocked user இனி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பாக்கி இராணுவக்கோழைகளை பங்களாதேசில் செய்தது போல டெளசர் அவிழ்ப்பு விழா நடத்தியே ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X