கார்கில் வெற்றி தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்கில் வெற்றி தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: கார்கில் போர் வெற்றி தினம், நாடு முழுவதும் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது.அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் மலைப் பகுதியில், 1999ல், போர் நடந்தது.இந்த போர், 1999ம் ஆண்டு ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்து, நம் வீரர்கள் கார்கில் மலை உச்சியில், நம் மூவர்ணக் கொடியை பறக்க விட்டனர். இந்த போரில், நம்
Kargil Vijay Diwas, Kargil day, Kargil War, India, Pakistan, கார்கில், வெற்றி தினம், கொண்டாட்டம்

புதுடில்லி: கார்கில் போர் வெற்றி தினம், நாடு முழுவதும் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் மலைப் பகுதியில், 1999ல், போர் நடந்தது.இந்த போர், 1999ம் ஆண்டு ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்து, நம் வீரர்கள் கார்கில் மலை உச்சியில், நம் மூவர்ணக் கொடியை பறக்க விட்டனர். இந்த போரில், நம் வீரர்கள், 500 பேர் வீரமரணம் அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 26ம் தேதி, கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்ட செய்தியில், ''கார்கில் போரின் போது, நம் மண்ணை காப்பதற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை, நாடும், நாட்டு மக்களும் எப்போது மறக்க மாட்டார்கள். கார்கில் போர் வெற்றி தினம், நம் வீர்ரகளின் துணிச்சலின் அடையாளம்,'' என, கூறியுள்ளார்.


latest tamil news


கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, டில்லியில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மலரஞ்சலி செலுத்தினார். ராணுவ அமைச்சருடன், முப்படை தளபதிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.

''கார்கில் போரில் எதிரிகளை துவம்சம் செய்து, விரட்டி அடித்து, துணிச்சலுடன் போராடிய வீரர்களை, இந்த நாடு பெருமிதத்துடன் நினைவுபடுத்துகிறது. ''பயமின்றி போராடிய வீரர்களை போற்றி வணங்குகிறேன்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X