பாக்., அத்துமீறி தாக்குதல் ஐ.நா.,வில் ஆப்கன் புகார்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

நியூயார்க் : அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து தங்களுடைய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்துவதாக, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் புகார் கூறியுள்ளது.

எல்லையைத் தாண்டி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நம் நாட்டின் மீது, பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும், எல்லையை மீறி, அத்துமீறி நுழைந்து, பாக்., தாக்குதல்கள் நடத்தி வருகிறது.இது தொடர்பாக, ஐ.நா.,வுக்கான ஆப்கானிஸ்தான் நிரந்தர பிரதிநிதி, அபேடா ராஸ், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: அண்டை நாடான பாகிஸ்தான், எங்களுடைய எல்லைக்குள் நுழைந்து, அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த அத்துமீறல்கள் குறித்து, கடந்தாண்டு, பிப்., மற்றும் ஆக.,ல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.சமீபத்தில், இதுபோல், பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறி எங்களுடைய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்திஉள்ளது. இதில், எங்களுடைய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.இந்தப் பிரச்னை தொடர்பாக, பாக்.,குடன் பேசி வருகிறோம். அதில் தீர்வு ஏற்படாவிட்டால், இந்த விவகாரத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தப்பிய பாக்., பயங்கரவாதிகள் : பயங்கரவாத அமைப்புகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஐ.எஸ்.ஐ.எல்.கே., எனப்படும் ஐ.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவு, இந்தியாவுக்கான அல் குவைதா அமைப்பு உட்பட, பல்வேறு பயங்கரவாத அமைப்பின் தலைவர்களாக, பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பயங்கரவாத குற்ற வழக்குகள் உள்ளன. ஆனாலும், சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கும் கறுப்பு பட்டியலில் இவர்களுடைய பெயர் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X