பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 6,911 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், நேற்று 6,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.13 லட்சமாக உயர்ந்துள்ளது.

மதுரையை போல, கோவையிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலம் முழுதும் 116 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில், நேற்று 64 ஆயிரத்து, 129 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 6,911 பேருக்கு பாதிப்பு உறுதியானது. சென்னையில், 1,155; செங்கல்பட்டில், 501; கோவையில், 220; திண்டுக்கல்லில், 203; காஞ்சிபுரத்தில், 363; கன்னியாகுமரியில், 215; மதுரையில், 209 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராணிப்பேட்டையில், 367; தேனியில், 217; திருவள்ளூரில், 480; துாத்துக்குடியில், 248; விழுப்புரத்தில், 208; விருதுநகரில், 385 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதன்படி 28 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மதுரையில், ஜூன் இறுதியில் அதிகரிக்க துவங்கியது போல, தற்போது, கோவையில் தொற்று பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.மாநிலத்தில் 23.51 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், இரண்டு லட்சத்து, 13 ஆயிரத்து, 723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 26 ஆயிரத்து 477 பேர் முதியவர்கள்.சென்னையில், 94 ஆயிரத்து, 695; செங்கல்பட்டில், 12 ஆயிரத்து, 266; கோவையில், 3,459; மதுரையில், 9,805; திருவள்ளூரில், 11 ஆயிரத்து, 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகிழ்ச்சி தரும் வகையில், 5,471 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 526 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், தஞ்சாவூரை சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபர் உட்பட 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால், இதுவரை அதிகபட்சமாக சென்னையில், 2,011; செங்கல்பட்டில், 227; மதுரையில், 210; திருவள்ளூரில், 208 பேர் உட்பட மாநில முழுதும், 3,494 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம் மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 827 694 4செங்கல்பட்டு 12,266 8,898 227சென்னை 94,695 78,940 2,011கோவை 3,459 1,929 39கடலுார் 2,415 1,595 21தர்மபுரி 700 301 3திண்டுக்கல் 2,318 1,683 35ஈரோடு 618 443 8கள்ளக்குறிச்சி 3,065 2,111 19காஞ்சிபுரம் 7,161 4,432 89கன்னியாகுமரி 3,610 1,797 32கரூர் 364 197 9கிருஷ்ணகிரி 716 337 14மதுரை 9,805 7,643 210நாகை 565 314 3நாமக்கல் 520 244 5நீலகிரி 692 480 2பெரம்பலுார் 322 217 3புதுக்கோட்டை 1,617 931 21ராமநாதபுரம் 3,040 2,188 57ராணிப்பேட்டை 3,834 1,804 28சேலம் 3,001 2,084 23சிவகங்கை 2,079 1,415 33தென்காசி 1,682 869 12தஞ்சாவூர் 2,045 1,064 18தேனி 3,773 1,984 48திருப்பத்துார் 907 528 9திருவள்ளூர் 11,876 7,897 208திருவண்ணாமலை 5,109 3,893 51திருவாரூர் 1,349 778 1துாத்துக்குடி 5,542 3,199 29திருநெல்வேலி 3,773 2,347 25திருப்பூர் 700 380 6திருச்சி 3,420 2,161 58வேலுார் 5,050 3,836 43விழுப்புரம் 3,131 2,223 32விருதுநகர் 5,959 3,290 57வெளிநாட்டில் இருந்து வந்தோர் 787 571 1உள்நாட்டு விமான பயணியர் 506 415 0ரயிலில் பயணியர் 425 414 0மொத்தம் 2,13,723 1,56,526 3,494

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X