சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கருப்பர் கூட்டத்திற்கு நிதி தந்தது யார்? செந்தில் வாசனிடம் கிடுக்கிப்பிடி

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கருப்பர் கூட்டத்திற்கு நிதி தந்தது யார்? செந்தில் வாசனிடம் கிடுக்கிப்பிடி

சென்னை : கருப்பர் கூட்டம் சேனலுக்கு நிதி அளித்து வந்தவர்கள் யார் என்பது குறித்து, செந்தில்வாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, வீடியோ வெளியிடப்பட்டது.சிறையிலடைப்புஇது தொடர்பான புகாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், 49; போரூர் சுரேந்தரன் நடராஜன், 36, உள்ளிட்ட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களில், செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கருப்பர் கூட்டம், யு டியூப் சேனலின், நிதி சார்ந்த விஷயங்களை, செந்தில்வாசன் தான் கையாண்டுள்ளார்.சென்னை, தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், இதர செலவுகளையும், அவர் தான் கவனித்து வந்துள்ளார். ஆவணங்கள் இவர் வாயிலாகவே, யு டியூப் சேனலுக்கு நிதி வந்துள்ளது. போலீசார் ஏற்கனவே, கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில், விசாரணை நடக்கிறது. சேனலுக்கு பணம் எங்கிருந்து வந்தது, யாரிடம் இருந்து வந்தது என்பது குறித்து, செந்தில் வாசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார்.

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள், நிதி அளித்து வந்துள்ளன. அவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க மறுக்கிறார். செந்தில்வாசன், அவரது கூட்டாளி, சுரேந்தரன் நடராஜன் பின்னணியில், மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. முழுமையான விசார ணைக்கு பின்னரே, இவர்களின் சதி திட்டம் தெரியவரும் என, காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srini - ,
26-ஜூலை-202023:15:02 IST Report Abuse
Srini cut his ..... he will tell the truth
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X