பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு அனுமதி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற, அரசு அனுமதி அளித்துள்ளது.

வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான நெறிமுறைகள், அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும், ஸ்டேடியங்கள், விளையாட்டு திடல்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். தரை, விளையாட்டு கருவிகளை, அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

குறைந்த வீரர்கள், சமூக விலகலுடன் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். தேசிய, சர்வதேச வீரர்கள் பயன்படுத்தும் கருவிகளை, மற்ற வீரர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. வீரர்களின் பயிற்சி விபரங்கள், உடல்நிலையை தினமும் தனித்தனி பதிவேடுகளில் குறிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தி, பயன்படுத்திய பொருட்களை, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள், அதில் விதிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X