ராஜஸ்தானில் கவர்னர் பிடிவாதத்தால் அரசியல் குழப்பம் நீடிப்பு!

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
sachin pilot, ashok gehlo,t rajasthan political crisis, ராஜஸ்தான், கவர்னர், அரசியல் குழப்பம், நீடிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பதன் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்கள் அணி தாவுவதை தடுக்க, முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, பல்வேறு முக்கிய பிரச்னைகளை விவாதிப்பதற்கு, வரும், 31ம் தேதி சட்டசபையை கூட்டும்படி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம், மாநில அரசு சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டசபையை கூட்டுவதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், கவர்னர் மவுனமாக இருப்பதால், அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன.


பெரும்பான்மை:

அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் பதவியையும் பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் சட்டசபையில், மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 200. தன் அரசுக்கு, 102 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக, கெலாட் கூறி வருகிறார். பெரும்பான்மையை நிரூபித்து விட்டால், அடுத்த, ஆறு மாதத்துக்கு எந்த பிரச்னையும் அரசுக்கு இருக்காது என, கெலாட் நம்புகிறார்.

மேலும், காங்., கொறடா உத்தரவை மீறி, சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தாலோ அல்லது அரசுக்கு எதிராக ஓட்டளித்தாலோ, சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்வது எளிதாகி விடும் என, கெலாட் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், மேலும் எம்.எல்,ஏ.,க்கள் தாவுவதை தடுக்க முடியும் என, நம்புகிறார். கோரிக்கை இதனால், சட்டசபையை கூட்டுவதற்கு, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை, 23ம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கவர்னர் எந்த அறிவிப்பும் வெளியிடாததால், முதல்வர் கெலாட் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 24ல், கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதன் பின், சட்டசபையை கூட்ட சம்மதம் தெரிவித்த கவர்னர், அது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டிருந்தார். 'சட்டசபையை எந்த தேதியில் கூட்ட வேண்டும்; என்ன காரணத்துக்காக கூட்டப்படுகிறது; அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததா' என்று, விளக்கம் கேட்கப்பட்டது.

இதையடுத்து, 24ம் தேதி இரவும், நேற்று முன்தினம் மாலையும், முதல்வர் கெலாட் தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, வரும் 31ம் தேதி சட்டசபையை கூட்டக் கோரி, கவர்னரிடம் புதிதாக கடிதம் வழங்கப்பட்டது. இதில், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்றும், கவர்னர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு பதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காங்., குற்றச்சாட்டு:

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, டில்லியில் கூறியதாவது: ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட, கவர்னரிடம் கெஞ்ச வேண்டியுள்ளது. மத்திய அரசின் நெருக்கடிக்கு கட்டுப்பட்டு, சட்டசபையை கூட்டுவதை கவர்னர் தாமதப்படுத்துகிறார். இதனால், மாநிலத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை கண்டித்தும், மாநில அரசை கலைக்க முயற்சிக்கும் பா.ஜ.,வின் செயலை கண்டித்தும், போராட்டம் நடத்த காங்., முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


எம்.எல்.ஏ.,க்களுக்கு யோகா பயிற்சி:

ராஜஸ்தானில், கெலாட் ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெய்ப்பூரில் ஒரு நட்சத்திர ஓட்டலில், 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும், திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன; சமையல் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. விடுமுறை நாளான நேற்று காலை, எம்.எல்.ஏ.,க்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.


ஜனநாயகத்துக்கு குரல் கொடுங்கள்!

''ஜனநாயகத்தை காக்க, நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும்,'' என, காங்., - எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இன்று, ஒட்டுமொத்த நாடும், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் வேளையில், அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில், பா.ஜ., இறங்கியுள்ளது. 2018ல், ராஜஸ்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும், ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதை, பா.ஜ., நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை மதித்து, உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். எங்களுடன் இணைந்து, ஜனநாயகத்துக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூலை-202021:44:45 IST Report Abuse
ஆரூர் ரங் எம் எல் ஏக் க்களை அடைச்சு வெச்சிருக்கிற ஓட்டல் பில் ஏறிக்கிட்டே இருக்குது . எம் எல் ஏக்கள் கேட்கிற சிறப்பு வசதி செஞ்சு கொடுத்து கட்டுப்படியாகல ஊரடங்கு உத்தரவுப்படி ஓட்டல் திறந்திருக்கக்கூடாதாம் . எனவே கவர்னர் துரைத்தனத்தார் சட்டசபையைக்கூட்டி அவர்களுக்குள்ளே கொரோன பரவலுக்கு உதவுமாறு உங்கள் தாழ்மையுள்ள முதல்வர்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202016:44:01 IST Report Abuse
தமிழ்வேல் கண்டித்து எழுதி இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
27-ஜூலை-202015:05:25 IST Report Abuse
N S ... ரபெல் விமானங்கள் வர தொடங்கியாச்சு. யாரும் பணம் பண்ணமுடியவில்லை. ... "ஜனநாயகத்துக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்". காங்கிரஸ் கட்சியின் பாசமான, பரிதாபமான, கெஞ்சல்.
Rate this:
27-ஜூலை-202019:54:59 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் APPO 40000 KODI AMBANI SAGODHARARUKKU KADANAI ELLAM ADAICHIDUVAAR NAMMUDAYA PANATHIL...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X