சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான் சாகப் போகிறேன்: நடிகை 'பகீர்'

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : சீமான் உள்ளிட்டோர் மீது, குற்றஞ்சாட்டி வந்த நடிகை விஜயலட்சுமி, நேற்று தற்கொலை செய்து கொள்வதாக கூறி 'வீடியோ' ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ரத்த அழுத்தத்திற்கு போடும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விஜய், சூர்யா நடித்த, பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி.
 நான் சாகப் போகிறேன்: நடிகை 'பகீர்'

சென்னை : சீமான் உள்ளிட்டோர் மீது, குற்றஞ்சாட்டி வந்த நடிகை விஜயலட்சுமி, நேற்று தற்கொலை செய்து கொள்வதாக கூறி 'வீடியோ' ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

ரத்த அழுத்தத்திற்கு போடும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விஜய், சூர்யா நடித்த, பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. கர்நாடகாவில் இருந்து, சமீபத்தில் சென்னை வந்தார். உடல் நலமின்றி இருந்த அவருக்கு, நடிகர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டினர்.

வீடியோ : இந்நிலையில், 'தன் நிலைமைக்கு, நடிகரும், இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான, சீமான் தான் காரணம்' என, குற்றஞ்சாட்டி, சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அதனால், சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், விஜயலட்சுமி மீது புகார் கூறி வந்தனர். இதையடுத்து, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, விஜயலட்சுமி நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: நான்கைந்து மாதங்களாக, சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தொல்லையால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அம்மா, அக்காவுக்காக தான், நான் மல்லுக்கட்டி வாழ நினைத்தேன்.நான், கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, சீமான் போன்றோர் என்னை கொடுமைப்படுத்தி உள்ளனர். ஒரு பெண்ணாக இதற்கு மேல் என்னால் சமாளிக்க முடியாது.சில நாட்களுக்கு முன், ஹரி நாடார் என்னை மிகவும் அசிங்கப்படுத்தினார்; ஜாதியை பற்றி பேசினார்.

என்னை அவமானப்படுத்த எண்ணி, தவறாக சித்தரித்தனர்.பாடம் சொல்லும்அவமானப்பட்டால் என்ன செய்ய வேண்டும்; இந்த வீடியோவில் தெளிவாக சொல்கிறேன். என் குடும்பத்தை விட்டு விட்டு செல்கிறேன். நான் வாழ விரும்பவில்லை. எனக்கு போதுமென்றாகி விட்டது. உயர் ரத்த அழுத்தத்திற்கு போடும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு விட்டேன். என் இறப்புக்கு பின், சீமானை யாரும் விடக்கூடாது; முன்ஜாமின் கூட கிடைக்கக் கூடாது. நாக்கை அறுத்து விடுவேன் என, நான் சொன்னது உண்மை தான். ஆனால் 'அவள் சொன்னது உண்மை' என, நாளை சொல்வீர்கள்.நான் எவ்வளவு கதறி உள்ளேன்.
அந்த கதறல் அனைத்தையும் ஜாலியாக மட்டுமே பார்த்துள்ளீர்கள். மாநில அரசு கூட நடவடிக்கை எடுக்கலாமா; வேண்டாமா என்று தான் யோசித்தது. என் இறப்பு பாடம் சொல்லும். நான் ரொம்ப நாள் வாழ ஆசைப்பட்டேன்; சீமான் போன்றோர் விடவில்லை. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இனி நான் உங்களுக்கு, நினைவாக மட்டுமே இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.அதிக மாத்திரைகள் சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
28-ஜூலை-202022:20:24 IST Report Abuse
Thirumurugan நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,இந்தியா
28-ஜூலை-202018:46:46 IST Report Abuse
Abdul Aleem யார் இவரை தூண்டிவிடுவது என்று தெரியலை பாவம் சீமான் பிரதர் மாட்டிக்கொண்டார்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
02-ஆக-202017:45:42 IST Report Abuse
Sathya Dhara சீமான் பிரதர் என்றும்... பாவம் மாட்டிக்கொண்டார் என்றும்.. எழுதினால் அவருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி வாசகர்கள் அறியவேண்டும்.....
Rate this:
Cancel
Ramalingam Gopal - Chennai,இந்தியா
28-ஜூலை-202017:55:41 IST Report Abuse
Ramalingam Gopal அதற்குத்தான் மூன்று கட்டப்பஞ்சாயத்துக்காரிகள் தோன்றி இருக்கிறார்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X