டிராபிக் ஜாம்: கடலூர் நேதாஜி சாலையில் அடிக்கடி...அகலப்படுத்திட நடவடிக்கை தேவை கடலூர் வளர்ந்து வரும் நகரம்.| Dinamalar

தமிழ்நாடு

'டிராபிக் ஜாம்': கடலூர் நேதாஜி சாலையில் அடிக்கடி...அகலப்படுத்திட நடவடிக்கை தேவை கடலூர் வளர்ந்து வரும் நகரம்.

Added : ஜூலை 26, 2020
Share
 'டிராபிக் ஜாம்':  கடலூர் நேதாஜி சாலையில் அடிக்கடி...அகலப்படுத்திட நடவடிக்கை தேவை கடலூர் வளர்ந்து வரும் நகரம்.

சென்னை, புதுச்சேரியிலிருந்து நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உட்பட பல நகரங்களுக்கு கடலுார் நேதாஜி சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும்.

இந்தசாலை மிகவும் குறுகலாக இருப்பதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இருப்பினும் இலகுரக வாகனங்கள் அதிகமாகி விட்டதால் மீண்டும் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.கடந்த 1991ல் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. காலப்போக்கில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது, பெருவெள்ளம், புயல் காரணமாக சாலை பாதிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வடிய பச்சையாங்குப்பத்தில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை மழைநீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டது

.குறுகலான நேதாஜி சாலையால் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், நமக்கு ஏன் என் வம்பு என கடைசி நேரத்தில் வடிகால் அமைக்கும் திட்டத்தை தலைமை தபால் நிலையத்தோடு முடித்துக்கொண்டனர்.இத்திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நேதாஜி சாலை குறுகலாக இருப்பதால் சமதரையில் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்த பணியை நகராட்சியே மேற்கொள்ளும் என்றனர்.தற்போது நெல்லிக்குப்பம் சாலையில் ஏற்கனவே கட்டியிருந்த கால்வாயை இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் சிறு வடிகால், கழிவுநீர் கால்வாய் கூட இல்லாத நேதாஜி சாலையில் இதுவரை வடிகால் கட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் பெய்த கன மழையில் தண்ணீர் வெளியேற வழியின்றி நேதாஜி சாலையில் 3 அடி வரை தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாமல் டிராபிக் ஜாமாகியது.கடலுாரில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,கள், அமைச்சர்கள் என பலர் இருந்தும் நகரின் இதய துடிப்பாக இருக்கும் இந்த சாலையை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.எனவே வரும் மழைகாலத்திற்குள் போர்க்கால அடிப்படையில், நேதாஜி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X