பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை தாயக நாளையொட்டி பா.ம.க., மரக் கன்றுகள் நடல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; பசுமை தாயக நாளையொட்டி, விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க.,வினர் மரக் கன்றுகள் நட்டனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25, பசுமை தாயக நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும் விதமாக, அவரவர் வீடுகளில் மரக் கன்றுகள் நடுமாறு இளைஞரணி தலைவர் அன்புமணி எம்.பி., சவுமியா அன்புமணி ஆகியோர் அறிவுறுத்தினர்.அதன்படி, விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க., மேற்கு மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமையில் மரக் கன்றுகள் நடப்பட்டன. துணைச் செயலர் குணசேரன், ஒன்றிய செயலர்கள் ஆறுமுகம், ராஜ்குமார், பாக்யராஜ், ஊடகப் பேரவை தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மேற்கு மாவட்டம் சார்பில் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் வீடுகள், தோட்டங்களில் தென்னை, வேம்பு, ஆலம், அரசு உள்ளிட்ட மர கன்றுகளை நட்டனர். அந்தந்த பகுதியில் பொது மக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X