பொது செய்தி

தமிழ்நாடு

கீரப்பாளையம் ஒன்றிய செயலர்கள் நியமனம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க., கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மேற்கு மாவட்டம், கீரப்பாளயைம் ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து, புதிய செயலர்கள் நியமிக்க அக்கட்சி முடிவு செய்தது. அதன்படி அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும் முன்னாள் எம்.பி.,யுமான அருண்மொழிதேவன், கிழக்கு ஒன்றியத்திற்கு சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தியையும், மேற்கு ஒன்றியத்திற்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், சாக்காங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவருமான கருப்பன் ஆகியோரை கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்தார்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் இதற்கு ஒப்புதல் அளித்து இருவரையும் ஒன்றிய செயலர்களாக அறிவித்தனர்.புதிதாக பொறுப்பேற்ற இருவருக்கும் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X