இந்தியா

நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலம் வட்டார விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர் பாசன கருவிகள் அமைத்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கண்டமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கண்டமங்கலம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத் தப்படும் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு ரூ.2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர்ப்பானக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைத்து தரப்படுகிறது.இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், மின்மோட்டார் அல்லது டீசல் என்ஜின் வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.பாசன நீர் எடுத்துச் செல்வதற்கான பிவிசி பைப் வாங்க ரூ.10 ஆயிரம், நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விவசாயிகள் மானியம் பெற சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு குறு விவசாயி சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நீர் மற்றும் மண் மாதிரி அறிக்கைகள் மற்றும் விவசாயி புகைப்படம் போன்ற ஆவணங்கள் கொண்டு TNHORTICULTURE என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் கண்டமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து தங்கள் நிலங்களில் நுண்ணீர்ப்பாசன கருவிகள் அமைத்து பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X