அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சோனியாவுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
dm,k, Stalin, Sonia, MK Stalin, Congress, Sonia Gandhi, திமுக, காங்கிரஸ், ஸ்டாலின், சோனியா

சென்னை : பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க. நடத்தும் சமூகநீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காங். தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் விவரம்: பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமுதாயத்தினர் மருத்துவ கல்வியில் முன்னேறுவது மிக முக்கியம். அது ஒன்றே இந்த சமுதாயங்களுக்கு அதிகாரமளித்து ஏற்றத் தாழ்வுகளை நீக்கி ஜாதியற்ற ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின மாணவர்களுக்கு மத்திய தொகுப்பு இடங்களில் மாநில அளவிலான இடஒதுக்கீடு கொள்கையை கடைப்பிடிக்காமல் மருத்துவ கல்வி சேர்க்கையில் இழைக்கப்படும் அநீதியை அனுமதிக்க முடியாது.இதற்காக தி.மு.க. நடத்தும் போருக்கு தங்களின் ஆதரவை கோருகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் விவசாயி அணைக்கரை முத்து வனத்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டு மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
27-ஜூலை-202020:39:25 IST Report Abuse
mathimandhiri நாடே போற்றும் நல்ல தலைவர்கள் ஒன்று படப் போகிறார்கள். நாடு எங்கோ செல்லப் போகிறது. மருத்துவத் துறை மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் ஓஹோன்னு உயர்ந்து வல்லரசாகப் போகிறது. மக்களே உணருங்கள்.இந்த நேர்மை தவறாத உத்தமர்களுக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
27-ஜூலை-202019:11:30 IST Report Abuse
கொக்கி குமாரு இல்லையே, எங்கேயோ இடிக்குதே. ஒரு துண்டுசீட்டில் எழுதியிருக்கும் இரண்டு வரிகளை எழுத்துக்கூட்டி படிக்கத்தெரியாத சுடலையார் எப்படி கடிதம் எழுதியிருக்க முடியும். நான் நம்பமாட்டேன். சுடலையார் கடிதம் எழுதும் வீடியோவை காட்டுங்கள் பார்ப்போம்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அன்னையே சொக்கத் தங்கமே! ஓடிவா ஓடோடி வா!! இட ஒதுக்கீடு போர் ஆரம்பித்துவிட்டது! . தோள் குடுக்க ஓடிவா. அன்பு இளவரசருடன் ஓடோடி வா. முடிந்தால் பீரியங்கா காந்தி ரோகன் காந்தி ROBBER காந்தி என்று எல்லா காந்தி களையும் கூட்டி வா!. இந்த ஆரியப் பிசாசுகளை எதிர்க்க பறந்து வா வா வா!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X