இந்தியா

அதிக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி இறந்தார்.புதுச்சேரி ரெயின்போ நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபால் மனைவி செங்கேணி, 63; கணவர் இறந்ததால் செங்கேணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு தேவையான உதவிகளை புதுச்சேரி பவழ நகரை சேர்ந்த உறவினர் அலமேலு 48; வண்டிப்பாளையம் சிவகாமி,58; ஆகியோர் செய்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக செங்கேணி ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். எப்போதும் அலமேலு தான் மாத்திரை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை 10 மணிக்கு செங்கேணிக்கு நோய் கொடுமை அதிகமானதால், அலமேலு இல்லாத சூழ்நிலையில் பதற்றத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அப்போது ஏதேச்சையாக செங்கேணியை பார்க்க வந்த சிவகாமி, அவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்து பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X