குடும்ப தகராறில் கணவர் தற்கொலை | Dinamalar

இந்தியா

குடும்ப தகராறில் கணவர் தற்கொலை

Added : ஜூலை 26, 2020
Share

காரைக்கால்; குடும்ப தகராறில் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருநள்ளாறு, கீழசுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் இளம்பூரணம்,31; டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சில தினங்களாக கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அதில் விரக்தி அடைந்த இளம்பூரணம் நேற்று முன்தினம் கீழசுப்புராயபுரத்தில் உள்ள தோப்பில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X