இந்தியா

ஜெ,, இல்லம் அரசுடைமையாக்கம் அன்பழகன் பாராட்டு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மறைந்த தமிழக முதல்வர் வாழ்ந்த இடம் அரசுடமையாக்கியதற்கு அன்பழகன் எம்.எல்.ஏ., பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் இறுதி மூச்சு உள்ளவரை ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்தவர். தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவிற்குப் பிறகு அவர் வாழ்ந்த வீடு அரசுடமையாக்க வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனையேற்று, ஜெ., வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கிய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் நன்றியையும் பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X