இந்தியா

புதுமணப் பெண் தற்கொலை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி ;ஜிப்மர் ஊழியரின் மனைவி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.முருங்கம்பாக்கம், நாட்டார் வீதியை சேர்ந்தவர் ஜெயந்தன், ஜிப்மரில் பல்நோக்கு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலுார் மஞ்சக்குப்பம் உப்பலவாடி ரோடு சிவானந்தம் நகரை சேர்ந்த முத்து மகள் சவுந்தர்யா,21; கடந்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் தங்கி இருந்த சவுந்தர்யா கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லுாரி திறக்காததால் வீட்டில் இருந்த சவுந்தர்யா நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு திடீரென வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் தந்தை முத்துவிடம் புகார் பெற்று, போலீசார் வழக்கு பதிந்து, சவுந்தர்யா குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு பிரச்னையா என கணவர் ஜெயந்தனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.சவுந்தர்யாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என தாசில்தார் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X