பொது செய்தி

தமிழ்நாடு

கேரட் நடவுக்கு இயந்திரம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கோவை : கேரட் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான இயந்திரத்தை, கோவை கல்லுாரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

கேரட் விவசாயிகளுக்கு உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். 'ரோவர்' என பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், இன்ஜின் எதுவும் இல்லை என்பதால், பெட்ரோல், டீசல் தேவையில்லை. ஒருவர் தள்ள, இன்னொருவர் இழுத்துச் செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஐந்து வரிசைகளில், கேரட் விதையை 'லோடு' செய்யலாம். இழுக்கும்போது, இயந்திரம் முதலில் கோடு போல மண்ணை கீறி, அதில் விதையை போடுகிறது. உடனே, விதையை மூடி, மட்டம் செய்து விடுகிறது.ஒரு இயந்திரத்தால், ஐந்து மணி நேரத்தில், 1 ஏக்கர் நடவு செய்து விட முடியும். விதை வீணாவது தவிர்க்கப்படுகிறது.

ஒரே நேர் வரிசையில், சீரான இடைவெளியில் விதைகள் விழுவதால், முளைப்புத்திறன், வளர்ச்சி அதிகமாக இருக்கும். இயந்திரத்தை உருவாக்கிய, ஜான் ஜார்ஜ், லோகு பிரசாத், ஜெயகுரு ஜெயபாலன் கூறியதாவது:கோவை தனியார் கல்லுாரியில், பி.இ., புரடக் ஷன் இன்ஜினியரிங் படித்தோம். இறுதி ஆண்டு, 'புராஜக்ட்' ஆக, கேரட் அறுவடை இயந்திரம் தயார் செய்திருந்தோம்.அந்த அடிப்படையில், கேரட் நடவு இயந்திரத்தை தயார் செய்தோம். வேலையும் எளிது; செலவும் குறைவு. 10 விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை விற்றுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X