பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பா; கலெக்டர்களுடன் முதல்வர் ஜூலை 29ல் ஆலோசனை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஜூலை 31க்கு பின் பொது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன்ஜூலை 29ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ல் ஊரடங்கு நிறைவடைகிறது.இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில்
lockdown, curfew, TamilNadu, CM, EPS, ஊரடங்கு, நீட்டிப்பா, கலெக்டர், முதல்வர், ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31க்கு பின் பொது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன்ஜூலை 29ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ல் ஊரடங்கு நிறைவடைகிறது.இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் முன்பை விட கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது.

இந்நிலையில் ஜூலை 29ல் மாவட்ட கலெக்டர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாவட்டங்களில் நோய் அதிகரிப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார்.அத்துடன் ஊரடங்கை தளர்த்தலாமா அல்லது நீட்டிக்கலாமா என கலெக்டர்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். ஜூலை 30ல் மருத்துவ நிபுணர் குழுவினரின் கருத்தையும் கேட்க உள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனைகளை கேட்ட பின் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது விலக்குவதா; என்பதை முதல்வர் முடிவு செய்ய உள்ளார். எனவே ஜூலை 30ல் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது:சென்னை நகரில் தொற்று பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது. அதேநேரத்தில் மற்ற நகரங்களிலும் மாவட்டங்ளிலும் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து தினமும் புதிய உச்சத்தை சந்தித்து வருகிறது. இதனால் இப்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veerappan Sivaprakasam - Nagapattinam,ஓமன்
27-ஜூலை-202019:37:07 IST Report Abuse
Veerappan Sivaprakasam Last 15 days maintain below 4000 cases-4500 குரோன cases. now increase to above 5000cases. next week increase to 10000 cases for d number by all district to maintain the figure for keeping tamilnadu in lock down. Like bussiness till next may. குட் plan .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூலை-202016:37:26 IST Report Abuse
g.s,rajan People are definitely going to revolt against the central and state Governments, day to day life is very worsely affected to them, running life is ultimately very hardship for common man.If the lockdown continues further people will surely protest. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
27-ஜூலை-202013:31:51 IST Report Abuse
Visu Iyer ஊரடங்கு விரும்பினால் தொடரட்டும்.. ஊரடங்கு இல்லாத மாநிலத்திற்கு இடம் பெயர வாய்ப்பு கிடைத்தால்.. எத்தனை பேர் போக தயாராக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X