பொது செய்தி

இந்தியா

கொரோனாவை ஒழிக்க சுதந்திர தினத்தில் சபதமேற்போம்: பிரதமர் மோடி

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
mann ki baat, PM, MOdi, Coronavirus, covid19, பிரதமர், மோடி, மன் கீ பாத்

புதுடில்லி : ''சுதந்திர தினத்தன்று இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவதற்கு சபதம் ஏற்போம். இந்த கொடிய வைரஸ் இன்னும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கூடுதல் விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட வேண்டும். வெளியில் செல்லும்போது முகக் கவசத்தை கழற்றுவதற்கு முன் கொரோனாவை தடுப்பதற்காக போராடும் டாக்டர் நர்சுகளின் அர்ப்பணிப்பு உணர்வை அனைவரும் ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்'' என பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்றைய உரையில் கார்கில் போர் வெற்றி தினம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனை உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார்.

அவர் பேசியதாவது: இன்று கார்கில் போரில் நாம் வெற்றி பெற்ற நாள். 21 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் நம் ராணுவம் கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த நாளை எப்போதுமே இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்; மறக்கவும் முடியாது. நம் வீரர்களின் வீரத்தையும் துணிச்சலையும் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்ட நாள் இது. இந்த போரில் வெற்றி பெற்ற பின் பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருக்க முயன்றோம்; ஆனால் அது சாத்தியமாகவில்லை. பாகிஸ்தான் நம் முதுகில் குத்தியது; அது அவர்களின் இயற்கையான குணம்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கும். வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம். எல்லையில் மட்டுமல்லாமல் நாட்டுக்குள்ளும் பல முனைகளிலும் ஒரே நேரத்தில் போரிட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. கடினமான சூழலில் எல்லையில் நமக்காக வீரர்கள் போராடுவதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இதில் தங்களுக்கு உள்ள பங்கு குறித்து முடிவு செய்ய வேண்டும்.

கொரோனா பேரிடருக்கு மத்தியில் இந்தாண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இதற்கு முன் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிகளை விட இது வித்தியாசமானதாக இருக்கும். சுதந்திர தினத்தன்று இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவதற்கு இளைஞர்களும் பொதுமக்களும் சபதம் ஏற்க வேண்டும். தற்சார்புள்ள பொருளாதார நாடாக நம் நாட்டை மாற்றுவதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததன் வாயிலாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளோம்.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் சதவீதம் அதிகம். அதேபோல் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் கொரோனா உயிரிழப்பும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இன்னும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி நபர் இடை வெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். இதுபோன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தான் கொரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். முகக்கவசம் அணிவதால் மூச்சு விட சிரமமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். மற்றவர்களுடன் பேசும்போது சிலர் முக கவசத்தை கழற்றுகின்றனர்; இது மிகவும் தவறு.

வெளியில் செல்லும்போது முகக்கவசத்தை கழற்றுவதற்கு முன் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் டாக்டர் நர்ஸ் போன்ற கொரோனா போர் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வை நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக முகக்கவசம் அணிகின்றனர்.

அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவராண உதவிகளை மத்திய - மாநில அரசுகள் சமூக அமைப்புகள் செய்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் முழு வீச்சில் மீட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூலை-202022:52:16 IST Report Abuse
g.s,rajan Nowadays Indian people are not no freedom, India is under dictatorship,democracy is not there. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூலை-202022:49:11 IST Report Abuse
g.s,rajan Indians are already destroyed ,nothing else g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
27-ஜூலை-202021:12:39 IST Report Abuse
ஆப்பு ஆகஸ்டு 15 அன்று எல்லோருக்கும் தீபாவளி லேகியம் குடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X