சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' இருந்தாலும் ஏற்காத கர்நாடகா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 'இ - பாஸ்' இருந்தாலும் ஏற்காத கர்நாடகா

ஓசூர் : கர்நாடக மாநிலத்திலும், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் இருந்து சென்ற, 'இ - பாஸ்' வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில், கடந்த 22ம் தேதி முதல், ஊரடங்கு விலக்கப்பட்டது. ஆயினும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால், பஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட அனைத்து சோதனைச் சாவடிகளிலும், தமிழகத்தில் இருந்து, இ - பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள், திருப்பி அனுப்பப்பட்டன.

நடந்து சென்றவர்களை கூட அனுமதிக்கவில்லை. மருத்துவம் சார்ந்த, இ - பாஸ் பெற்றவர்கள், சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X