பொது செய்தி

தமிழ்நாடு

இதுதான் 'ஆக் ஷன்'இப்படி போச்சே ரூ.27 கோடி:இதுதாங்க சேவை:இதுவன்றோ மரியாதை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

முழு ஊரடங்கையொட்டி, திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், காலேஜ் ரோட்டில் ஒருவர் சிக்கன் கடையை திறந்து வியாபாரம் செய்தது தெரியவந்தது. விற்பனைக்காக வைத்திருந்த 10 கோழிகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கின்போது, இவ்வாறு விற்றால், கடை உரிமம் ரத்தாகும் என்று, அதிகாரிகள் கூறினர்.காங்கயம் நகராட்சி அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தாராபுரம் ரோடு பகுதியில் ராஜூ என்பவர் விதி முறைகளை மீறி, கோழிகடை திறந்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. விதிமீறலில் ஈடுபட்ட கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.திருப்பூர் தென்னம்பாளையத்தில் திங்கள்தோறும் மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். பல்வேறு மாவட்டங்கள், கேரளாவில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என, 500 பேர் வருவர். 1,200 மாடு, எருமை, ஆடு, கோழிகள் விற்கப்படும். ஊரடங்கு துவங்கியது முதல், 18 வாரங்களாக மாட்டுச்சந்தை நடக்கவில்லை. ஒரு வாரம் சந்தை நடந்தால் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.தொடர்ந்து, 18 வாரமாக சந்தை நடக்காததால், 27 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாட்டுச்சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு, சுங்க வசூல் செய்ய ஒப்பந்தம் செய்தவர்கள், நான்கு மாதமாக சந்தை நடக்காததால், கவலை அடைந்துள்ளனர்.பொங்கலுார் அடுத்த தேவனம்பாளையத்தில், சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்ற அலுவலகத்தில் முதல் உதவி மையம் துவங்கப்பட்டது. மருத்துவர் விஜயகுமார், முதலுதவி மையத்தை திறந்து வைத்து பொதுமக்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார். இங்கு ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி, சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, உடல் எடை, உயரம் சோதனை, உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு பார்க்கும் கருவி போன்றவை, 20,000 ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. மன்ற செயலாளர் சிவகுமார், துணைத்தலைவர் சந்தோஷ்குமார், துணை பொருளாளர் தமிழரசன், துணைச்செயலாளர் மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர், கிராமிய மக்கள் இயக்கம், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம், இணைந்து நடத்திய ஐந்தாவது வார பனை விதை நடும் நிகழ்ச்சி, தொரவலுார் ஊராட்சி வாரணவாசிபாளையம் மாரியம்மன் கோவில் குட்டையில் நடந்தது.கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக 500 பனை விதை மற்றும் வேம்பு, அரசு, ஆலம், அத்தி உள்ளிட்ட 25 மரக்கன்று நட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கிராமிய மக்கள் இயக்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சம்பத்குமார், சாமியப்பன், யோகேஷ், நவீன், சுரேஷ், பாபு, தரணிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X