பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தை தேடி 'அடுக்குமாடி' தேர்தல் 'மாயாஜாலம்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

அவிநாசி:மாநிலம் முழுக்க கிராமம் மற்றும் நகர பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலை, ஓடை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.கோர்ட் உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான ஆரம்பகட்ட பணி நடந்து வருகிறது. அங்கு வசிப்போருக்கு மாற்றிடம் ஏற்பாடு செய்து கொடுக்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம், ஏழை, எளியோர் பலர் வீட்டு வசதி கேட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருகின்றனர்.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், இவர்களின் ஆதரவை தக்கவைக்க, குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அவர்களை குடியமர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முந்தைய ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தற்போது, கிராமப்புறங்களை நோக்கி நகர துவங்கியிருக்கிறது. 'இதன் மூலம் கிராம சூழல் பாதிக்கப்படும்' என, பல இடங்களில், கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டந்தோறும் இலவச வீடு கேட்டு, ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு நிலம் இல்லாததால், கிராமப்புறங்களில் நிலம் தேர்வு செய்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X