பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி புறவழி சாலை வழித்தடத்தில் மாற்றமா?

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசியில் செயல்படுத்தப்பட உள்ள புறவழிச்சாலை திட்டத்தில், இடையூறு இல்லாத வழித்தடத்தைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டை மையமாக வைத்து, வழக்கமான நாட்களில், 10 ஆயிரம் வாகனங்கள் வரை, வந்து செல்கின்றன. வாகன நெரிசல், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அவிநாசி புறநகர் பகுதியில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு- - அவிநாசி ரோட்டில், பழங்கரை ரவுண்டானா பகுதியில் துவங்கி, ராயம்பாளையம், சின்னேரிபாளையம், சூளை வழியாக, ஆட்டையாம்பாளையத்தைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் நாதம்பாளையம் சர்வீஸ் ரோடு வரை புறவழி சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. மொத்தம், ஒன்பது கி.மீ., துாரமுள்ள இச்சாலை பணிக்கு, 50 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.இதன் மூலம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் கனரக, சரக்கு வாகனங்கள், நகருக்குள் நுழையாமல், புற வழியில் சென்று விடமுடியும். இதன் மூலம், அவிநாசி நகருக்குள் நெரிசல் தவிர்க்கப்படும்; மாசு, விபத்து குறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, இதுதொடர்பான கள ஆய்வுப்பணி நடந்து வருகிறது.'வடிவமைக்கப்பட்ட புறவழிச் சாலையில், புதிய குடியிருப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளன. நிலம் கையகப்படுத்துவது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல நிர்வாக பணிகள் உள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள காலதாமதம் மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால், திட்டமிடப்பட்ட புறவழிச் சாலையில், இடையூறு இல்லாத வழித்தடத்தை தேர்வு செய்து, சாலை அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்' என, நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X