பொது செய்தி

தமிழ்நாடு

கந்தன் பிரசாதமாக கபசுர குடிநீர்: பக்தர்கள் நெகிழ்ச்சி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 கந்தன் பிரசாதமாக கபசுர குடிநீர்: பக்தர்கள் நெகிழ்ச்சி

திருப்பூர்:கொரோனா பரவல் தடுக்கும் வகையில் கபசுர குடிநீர் பிரசாதமாக வழங்கி, பூச்சக்காடு முருகன் கோவிலில் வழிபாடு நடந்தது.திருப்பூர் கருவம்பாளையம் பூச்சக்காடு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள சுப்ரமணியர் சன்னதியில், நேற்று சஷ்டியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.கோவில் நற்பணி மன்றம் சார்பில், பக்தர்கள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கபசுர குடிநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.இப்பகுதியில் தொடர்ந்து 15 நாட்கள் கபசுரக் குடிநீர் வழங்கப்படவுள்ளதாக நற்பணி மன்றத்தினர் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த மன்றம் சார்பில் கொரோனா பரவல் துவங்கிய போது, 40 நாட்கள் தொடர்ந்து பூச்சக்காடு மற்றும் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X