சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் 'போதை' பாக்கெட் குவியல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 சாலையோரம் 'போதை' பாக்கெட் குவியல்

பல்லடம்:பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்கள், குவியலாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்து, போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு, தமிழகத்தில் மறைமுகமாக விற்கப்படுகின்றன.கடந்த இரண்டு மாதங் களுக்கு முன், சின்னக்கரை பகுதியில், வட மாநில வியாபாரி ஒருவர், போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஊரடங்கு காரணமாக, ஏராளமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இச்சூழலில், பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அருகே, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் (ஹான்ஸ்) பாக்கெட்கள், குவியல் குவியலாக கிடந்தன.ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகளில், போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க, போதைப்பொருள் பாக்கெட்கள் இங்கு கொட்டி செல்லப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X