மின் சலுகை பறிபோகிறதா? விசைத்தறியாளர்கள் தவிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பல்லடம்;''கட்டணம் இல்லா மின் சலுகை ரத்தானால், விசைத்தறி உட்பட ஜவுளி சார் தொழில்கள், நெருக்கடி நிலைக்கு உள்ளாகும்'' என்று விசைத்தறியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:விவசாயத்துக்கு அடுத்தபடியாக, விசைத்தறி தொழில் பிரதானமானதாக உள்ளது. கடந்த, 1994ம் ஆண்டு விசைத்தறி தொழில் நெருக்கடியில் இருந்தபோது, அப்போதைய அரசு, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ததுடன், இரண்டு மாதங்களுக்கு, 750 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம் வழங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டது.இதனால், பல்வேறு இக்கட்டான கால கட்டங்களிலும், மின்கட்டணம் இல்லாததால், விசைத்தறி தொழில் நெருக்கடியில் இருந்து தப்பி வந்தது. தற்போது, ஊரடங்கு காரணமாக, விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின் சட்டம் காரணமாக, விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா மின்சாரம் ரத்து ஆகுமோ என்ற அச்சம் விசைத்தறியாளர்களுக்கு எழுந்துள்ளது. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் மட்டுமன்றி, தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும், ஜவுளித்துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும், நெருக்கடி நிலைக்கு ஆளாகும்.விசைத்தறித் தொழிலை காப்பாற்ற, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து விசைத்தறி சங்கங்களும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X