திறந்திருந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறந்திருந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம்

Added : ஜூலை 27, 2020
Share

அன்னூர்:அன்னூரில், நேற்று பறக்கும்படை தாசில்தார் ராஜன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அச்சம்பாளையத்தில் திறந்திருந்த ஆட்டு இறைச்சி கடை உரிமையாளருக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. குப்பனூரில் திறந்திருந்த இறைச்சி கடையில், ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.தாசில்தார் சந்திரா தலைமையிலான அதிகாரிகள் குன்னத்தூராம்பாளையத்தில், வெளியூர் நபர்களை வைத்து, விசைத்தறி கூடங்களை இயக்கியவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.குமாரபாளையம் மற்றும் சொக்கம்பாளையத்தில், திறந்திருந்த இறைச்சி, மளிகைக் கடைகளில், அபராதம் வசூலிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களிடம், 10 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. ஒன்றியத்தில் நேற்று 14 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X