சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குடன் தப்பிய இளைஞர் கைது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்;காரமடை அடுத்த விஜயநகரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் காரமடை அடுத்த கட்டாஞ்சி மலைமீது, பைக்கில் செல்லும் போது, இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே கீழே விழுந்துள்ளார். அவ்வழியாக ஆட்டோவில் வந்த, ஜோதிபுரத்தைச் சேர்ந்த சதாசிவம், 24, ராமமூர்த்திக்கு உதவி செய்துள்ளார்.இருவரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளியங்காடு சென்று, டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி விட்டு, கட்டாஞ்சி மலைக்கு வந்துள்ளனர். அங்கு ராமமூர்த்தியை இறக்கி விட்ட சதாசிவம், பைக்கில் தப்பி விட்டார்.புகாரின்படி, போலீசார் சதாசிவத்தை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X