சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச படம் பதிவிறக்கம் மளிகை கடைக்காரர் கைது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

போத்தனூர்;ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த, மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.ஈச்சனாரியை அடுத்த மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுனில்குமார், 48: ஒத்தக்கால் மண்டபத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் தனது மொபைல் போனில், சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார். இத்தகவல், மாவட்ட எஸ்.பி.,க்கு, சென்னையிலிருந்து தெரிவிக்கப்பட்டது.எஸ்.பி., உத்தரவில், செட்டிபாளையம் போலீஸ் எஸ்.ஐ.,அருள்பிரகாஷ், சுனில்குமாரை கைது செய்தார். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X