இனி, கிளை அஞ்சலகங்களிலும் அனைத்து சேமிப்பு கணக்குகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி, கிளை அஞ்சலகங்களிலும் அனைத்து சேமிப்பு கணக்குகள்

Added : ஜூலை 27, 2020
Share

திருப்பூர்:தபால்துறை அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களையும், கிளை தபால் அலுவலகங்கள் வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.கிராமப்புறங்களில், ஒரு லட்சத்து, 31 ஆயிரத்து, 113 கிளை தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. கடிதங்கள், ஸ்பீடு போஸ்ட், பார்சல்கள், இ- மணியாடர், கிராமிய தபால் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகளை தவிர, தபால் சேமிப்புகணக்கு, ஆர்.டி., வைப்பு கணக்கு, செல்வ மகள் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட திட்டங்களும் இங்கு வழங்கப்படுகின்றன.தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி, மாத வருமான திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் போன்ற வசதிகளையும் வழங்க தபால்துறை அனுமதித்துள்ளது.கிராமங்களில் வசதிக்கும் மக்கள் இனி, நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பெறும் அதே தபால் அலுவலக சேமிப்பு வங்கி வசதிகளை பெற முடியும். மேலும், கிராமப்புற மக்கள், தபால்துறையின் கிராமிய அஞ்சல் அலுவலகங்களிலே தபால்துறையின் பிரபல திட்டங்களில் இணைந்து டெபாசிட் செய்து பயனடையலாம்.கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு, இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X