சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுரோட்டில் முருகனின் வேல் வரைந்தவர்கள் மீது வழக்கு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 நடுரோட்டில் முருகனின் வேல் வரைந்தவர்கள் மீது வழக்கு

போத்தனூர்:போத்தனூர், குனியமுத்தூர் சுற்றும் பகுதிகளில், ரோட்டில் வேல் வரைந்தவர்கள் மீது, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு, சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு, ராஜா முத்தையா நகர் பஸ் ஸ்டாப், நஞ்சுண்டாபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சிட்கோ, குனியமுத்தூர், பி.கே.புதூர், குளத்துபாளையம் உள்ளிட்ட இடங்களில், ரோட்டில் வேல் வரையப்பட்டது. போலீசார் விசாரணையில், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர், இதனை செய்தது தெரிந்தது. 11 குழுவினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.மக்கள் அதிருப்தி முருக கடவுளின் முக்கிய அடையாளமாக வேல் கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேல், ரோட்டில் வரையப்பட்டுள்ளது. இதனை அவ்வழியே செல்வோர் மிதித்து செல்வர் என்பதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இனி வரும் காலங்களிலாவது, இது போல கடவுள்களின் உருவங்களையும், துதிகளையும், சார்ந்த பொருட்களையும் ரோட்டில் வரைவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-202015:34:02 IST Report Abuse
r.sundaram ரோட்டில் வரைவதை விட்டுவிட்டு சுவர்களில் வரைந்து இருக்கலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202004:30:37 IST Report Abuse
J.V. Iyer இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு கிழவனை தூக்கி மனையில் வை என்று சொல்வதைப்போல, இருக்கும் எல்லா முக்கிய பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இவர்களைப்போய்... இதில் என்ன பிழை கண்டார்கள்? தமிழ் நாட்டு காவல்துறை எங்கே போகிறது? அவர்களும் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களோ? ஒரு மழை வந்தால் எல்லாம் அழிந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X