மோசமான நிலையில் மின்கம்பம்; அகற்றாவிட்டால் துன்பம்!| Dinamalar

மோசமான நிலையில் மின்கம்பம்; அகற்றாவிட்டால் துன்பம்!

Added : ஜூலை 27, 2020
Share

மின் கம்பத்தை மாற்றணும்வடவள்ளி, வள்ளலார் நகரில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. கம்பத்தை மாற்றக்கோரி பலமுறை மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- சந்திரசேகரன், வள்ளலார் நகர்.

குழாயில் கசிவு; குடிநீர் வீண்மசக்காளிபாளையம், தனலட்சுமி நகர், கோவில் வீதியில், குழாய் ஏற்பட்டுள்ள கசிவால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- கவிதா,

தனலட்சுமி நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 60வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், தாகூர் நகரில் உள்ள, குழந்தைகள் பூங்கா அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது.- ரங்கராஜ், தாகூர் நகர்.

ஆக்கிரமிப்பை அகற்றணும்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, அபிராமி மருத்துவமனை எதிரில் உள்ள, அசோக் நகரில், சாலையை, 15 அடிக்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள, கடையை அகற்ற வேண்டும்.- மணி, அசோக் நகர்.

நாய் தொல்லை அதிகரிப்புபாலக்காடு ரோடு, குனியமுத்துார், ஞானபுரத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோரை இைவ துரத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- செந்தில்குமார், இடையர்பாளையம்.

குழாய் உடைப்பால் வீணாகுது தண்ணீர்பாப்பநாயக்கன்புதுார், ஸ்ரீ நகரில் உள்ள, பொதுக்குழாயில், உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக, சாக்கடை கால்வாயில் ஓடுகிறது.- ரத்தினம், ஸ்ரீ நகர்.

சாக்கடையை துார்வாரணும்கணபதி, சிவசக்தி காலனி, இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் குப்பை, மண்ணால் மூடப்பட்டு, அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தடையின்றி செல்ல, இக்கால்வாயை துார்வாரவேண்டும்.- செந்தில்குமார், சிவசக்தி காலனி.

ஆபத்தான மின் கம்பம்மாநகராட்சி, 60வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ். லே-அவுட், இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 201), சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது.- பழனிசாமி, எஸ்.எம்.எஸ். லே-அவுட்.

மரக்கிளையை அகற்றணும்செல்வபுரம், டாக்டர் ராஜரத்தினம் நகர், காட்டுபள்ளிவாசல் வீதியில், மின் கம்பிகளை உரசும் அளவுக்கு மரக்கிளைகள் வளர்ந்துள்ளது; மின் விபத்து ஏற்படும் முன், இக்கிளைகளை அகற்ற வேண்டும்.- ஆனந்த், செல்வபுரம்.

குடிநீர் வினியோகம் சீராக இல்லைமாநகராட்சி, 67வது வார்டுக்கு உட்பட்ட, திருவள்ளுவர் நகர் இரண்டாவது வீதியில், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தட்டுப்பாடு நிலவுகிறது. வாரம் ஒருமுறை வினியோகிக்க வேண்டும்.- சுப்ரமணியம், திருவள்ளுவர் நகர்.

சாக்கடையை சுத்தம் செய்வதில்லைமாநகராட்சி, இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட, வெள்ளக்கிணறு, அம்மாசி கவுண்டர் வீதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், சாக்கடை கால்வாய் அடைப்பு மற்றும் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தனலட்சுமி, அம்மாசி கவுண்டர் வீதி.

பாரதிபுரம் சாலையை செப்பனிடணும்மாநகராட்சி, 65வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம், பாரதிபுரத்தில் தார் சாலை வசதி இல்லாததால், மழை காலங்களில், சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்.- ஜான் ஜோசப், பாரதிபுரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X