பொது செய்தி

தமிழ்நாடு

'நாங்க பிராண்ட்டுக்கு மாறிட்டோம்!' முக கவச உற்பத்தியை தீவிரப்படுத்திய பிராண்டட் நிறுவனங்கள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 'நாங்க பிராண்ட்டுக்கு மாறிட்டோம்!'  முக கவச உற்பத்தியை தீவிரப்படுத்திய பிராண்டட் நிறுவனங்கள்

திருப்பூர்:தரமான முக கவசங் களை பொதுமக்கள் நாடத் துவங்கியுள்ளதால், திருப்பூரில் உள்ள பிராண்டட் நிறுவனங்கள், முக கவச உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளன.கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் முக கவசம் அணியத் துவங்கியுள்ளனர். ஏராளமான நிறுவனங்கள், சாதாரண துணி முக கவசங்களை தயாரித்து, விற்று வருகின்றன.
வெளிமாநில ஆடை வர்த்தகர்கள், ஆயத்த ஆடைகளோடு, முக கவசங்களை கேட்கத் துவங்கிவிட்டனர்.இதையடுத்து, திருப்பூரில் உள்ள பிராண்டட் ஆடை உற்பத்தி நிறுவனங்களும், முக கவசம் தயாரிப்பில் களமிறங்கிவிட்டன. இந்நிறுவனங்கள், சிறந்த தரத்தில், பலமுறை சலவை செய்து பயன்படுத்தும்வகையில், மூன்றடுக்கு முக கவசங்களை தயாரிக்கின்றன. முக கவசங்களில் முன்பகுதியில், தங்கள் பிராண்ட் லோகோவையும் பொறிக்கின்றனர்.முக கவசத்தில் மையப்பகுதியில், பிரத்யேக நுண்ணுயிர் வடிகட்டி இடம்பெறுகிறது. நீடித்த உழைப்பு, நுண்ணுயிர் வடிகட்டும் தன்மை, ஏற்கனவே ஆடை உற்பத்தியில் பெற்றுள்ள நன்மதிப்பு, இவையெல்லாம், பிராண்டட் நிறுவனங்களின் முக கவசங்களுக்கு, சிறந்த வர்த்தக தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என நாடு முழுதும், திருப்பூர் நிறுவனங்களின் தயாரிப்பிலான முக கவசங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.பிராண்டட் ஆடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:கொரோனாவால், முக கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை வர்த்தகர்கள், மக்கள், பிராண்டட் முக கவசங்களை அதிகம் விரும்புகின்றனர். இதையடுத்து, திருப்பூரில் பல பிராண்டட் நிறுவனங்கள், முக கவச உற்பத்தியை துவக்கியுள்ளன.ஓவன், பின்னல் துணி என இரண்டு வகைகளில், நீண்ட நேரம் அணிந்தாலும், அணிபவருக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதவகையிலும்; நுண்ணுயிர் புகாத வடிகட்டிகளுடன் தயாரிக்கப்படுகிறது.
மூன்று முக கவசங்கள் சேர்த்து, ஒரு பாக்கெட்டில் அடைத்து சந்தைப்படுத்தப்படுகிறது.25, 30, 50 ரூபாய் முக கவசங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. ஆடைக்கு மேட்சிங்காகவும், முக கவசங்கள் உருவாக்கப்படுகிறது. பிராண்டட் முக கவசங்களை மக்கள் அதிக ஆர்வமுடன் வாங்குகின்றனர்.அடுத்த ஆறு மாதங்களுக்கு, முக கவசம் விற்பனை சூடுபிடிக்கும்; அதன்பின், படிப்படியாக குறையத்துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது; சந்தை தேவை அறிந்து அதற்கேற்ப, முக கவசங்களை உற்பத்தி செய்துவருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X