பொது செய்தி

தமிழ்நாடு

பணி நேரத்தை குறையுங்கள்: வங்கி அதிகாரிகள் கடிதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பதுடன், பணி நேரத்தையும் குறைக்க, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு(தமிழ்நாடு) செயலாளர் சேகரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான வங்கி கிளைகளில், தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களில், வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் செலாவணி முறிச்சட்டம், 1881ன் கீழ், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பதுடன், நோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் வங்கிப் பணி நேரத்தை காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணியாக குறைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X