இன்று பிளஸ் 2 இறுதித்தேர்வு: கோவையில் 22 பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பிளஸ் 2 இறுதித்தேர்வு: கோவையில் 22 பேர் பங்கேற்பு

Added : ஜூலை 27, 2020
Share

கோவை:மாநிலம் முழுக்க, பிளஸ் 2 இறுதி பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, இன்று தேர்வு நடக்கிறது.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவடையும் தருவாயில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இறுதித்தேர்வில் சில மாணவர்களால், பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த, மாணவர்களிடம் விருப்ப கடிதம் பெறப்பட்டது.கோவை மாவட்டத்தில், இறுதி பொதுத்தேர்வை, ஆயிரத்து 600 பேர் எழுதாத நிலையில், 22 பேர் மட்டுமே, மீண்டும் அத்தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர்.இவர்களுக்கு, இயற்பியல், புவியியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு, இன்று நடக்கிறது. 16 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10:00 மணிக்கு துவங்கும் இத்தேர்வு, மதியம் 1:00 மணிக்கு நிறைவடைகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X