பொது செய்தி

தமிழ்நாடு

4வது வாரமாக 'ஞாயிறு போற்றுதும்' முழு ஊரடங்குக்கு முழுமையான ஒத்துழைப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 4வது வாரமாக 'ஞாயிறு போற்றுதும்' முழு ஊரடங்குக்கு முழுமையான ஒத்துழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நான்காவது வாரமாக, ஞாயிறு தினமான நேற்று, முழு ஊரடங்கிற்கு, பொதுமக்கள், முழு ஒத்துழைப்பு அளித்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த, மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நான்காவது வாரமாக நேற்றும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. திருப்பூர் உட்பட மாவட்டம் முழுதும், நேற்று காலையில் இருந்து இரவு வரை, பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட கடைகள், காதர்பேட்டை பகுதிகளில் செகண்ட்ஸ் விற்பனை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. ரோட்டோரம் இருந்த ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் தேவையான உணவை வழங்கினர்.
மேலும், நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொண்டனர்.தீவிர கண்காணிப்புநகரில் புஷ்பா சந்திப்பு, எம்.ஜி.ஆர்., சிலை, மாநகராட்சி சிக்னல், குமார் நகர் சிக்னல், காந்தி நகர் உட்பட முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.வெளியில் நடமாடிய வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரித்து அனுப்பினர். தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X