பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா குணமடைந்த செவிலியருக்கு நிவாரணம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, நிவாரணத் தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நோய் சிகிச்சைப் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அவ்வகையில், கொரோனா தடுப்பு பிரிவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் நிவாரணத்தொகையாக, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.இதனால், நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், தங்கள் விவரங்களை உரிய வழிமுறையில் கடிதமாக அளிக்க மருத்துவப் பணிகள் துறையினர் தெரிவித்துள்ளனர்.மருத்துவ பணிகள் துறை அலுவலர்கள் கூறுகையில், 'நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கையொப்பம் பெற்று, தங்கள் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில், பெயர், பணிபுரியும் மருத்துவமனை, கொரோனோ தொற்று பரிசோதனை முடிவு நகல், டிஸ்சார்ஜ் படிவ நகல் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X