பொது செய்தி

தமிழ்நாடு

புஷ்பா சந்திப்பில் வடிகால் பாலம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 புஷ்பா சந்திப்பில் வடிகால் பாலம்

திருப்பூர்:திருப்பூர் புஷ்பா சந்திப்பு நகரின் முக்கியமான பகுதியாக உள்ளது.இதில், போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள இடம் ரோட்டில் தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால், அங்குள்ள பஸ் ஸ்டாப் மற்றும் வளர்மதி கார்னர் பகுதியில் லேசான மழை பெய்தால் கூட மழை நீர் வந்து தேங்கி நின்று விடுகிறது. இதனால், அங்கு மழைநாட்களில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும், அவதியும் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அங்கு மழை நீர் வடிகால் (சிறு பாலம்) அமைக்க முடிவு செய்யப்பட்டது.அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை ரோடு அமைக்கும் திட்டத்தில் இப்பணி கூடுதல் திட்டமாக சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி 2 மீ., அகலம் 42 மீ., நீளத்தில், இங்கு ரோட்டின் குறுக்கே வடிகால் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணி ரோட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் மையப்பகுதி என மூன்று பிரிவாக மேற்கொள்ளப்படவுள்ளது. ஒரு பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு பணி துவங்கும் விதமாக குழி தோண்டும் பணி நேற்று துவங்கியது.பணியை விரைவில் முடித்து ஒப்படைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிறு பாலம் பணி முடிந்த பின்னர் இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில், பாதசாரிகள் வசதிக்காக நடை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X