திருப்பூர்:''மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், கூடுதல் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படுவதால், பொதுமக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை'' என்கிறது மாவட்ட நிர்வாகம்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 16ம் தேதி முதல், தினமும், 20 முதல், 51 பேர் வரை, கொரோனா தொற்று பரவி வருகிறது.
தொற்று பாதித்தவர் வேகமாக குணமடைந்து வந்தாலும், தொற்று பரவல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, 90 சதவீதம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கொரோனா தொற்று பாதித்தவர்கள், சில நாட்கள் கொரோனா வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.குணமான சில நாட்களுக்கு, மற்ற வார்டுகளில் தங்க வைக்கப்படுகின் றனர். படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், தற்காலிக மருத்துவமனைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், முழு வசதியுடன் மையம் தயாராக இருக்கிறது.இத்துடன், 'வென்டிலேட்டர்', ஐ.சி.யு., வசதியுடன், அவிநாசி மகாராஜா கல்லுாரியும் தயாராக உள்ளது.
தொற்று பரவல் வேகமெடுத்தாலும், சமாளிக்க ஏதுவாக கூடுதல் கொரோனா மையங்கள் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சிக்கண்ணா அரசு கல்லுாரி, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்திலும், தலா, 100 படுக்கைகளுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.முதல்கட்டமாக, கட்டில், மெத்தை, தலையணை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், பொதுப்பணித்துறை மூலம், ஒயரிங் பணிகளை செய்யவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:கொரோனா தொற்று சற்று அதிகமாக இருந்தாலும், ஆக., முதல் வாரத்திற்கு பிறகு, படிப்படியாக குறையுமென, சுகாதாரத்துறை கணித்துள்ளது.
அரசு உத்தரவுப்படி, கொரோனாவை சமாளிக்க, அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே, 2,480 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.கூடுதலாக, சிக்கண்ணா, வித்யா கார்த்திக் மண்டபம் உட்பட, தாலுகா வாரியாக, 100 படுக்கை வசதியுடன், கொரோனா மையம் அமைக்கப்படுகிறது. பாதிப்பு அதிகமாக வாய்ப்பில்லை என்றாலும், மாவட்ட நிர்வாகம் எத்தகைய பாதிப்பையும் சமாளிக்க தயாராக இருக்கிறது.தொற்று பாதித்தவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, கொரோனா மையங்களில், தனிமையான சூழலில் தங்க வைத்து, கண்காணிக்கப்படுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE