பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கடிதத்தின் கதை!எல்லா கட்டடங்களுக்கும் மின் இணைப்பு:கமிஷனர் எழுதியதன் பின்னணி என்ன?

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நகரங்களில் பார்க்கிங் இன்றியும், பாதுகாப்பு இன்றியும் வணிக கட்டடங்கள் கட்டுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் விபத்துக்கான வாய்ப்பும் அதிகமாகிறது.இவற்றைத் தடுக்கும் பொருட்டே, கடந்த ஆண்டில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019 உருவாக்கப்பட்டு அரசாணையும் (எண்:18 தேதி:4.1.2019) வெளியிடப்பட்டது.
அதன்படி, உரிய அங்கீகார அமைப்பிடம் கட்டட நிறைவுச்சான்று பெற்ற கட்டடத்துக்கு மட்டுமே, மின்சாரம், குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும்.இதிலுள்ள 20(1) விதியின்படி, 12 மீட்டர் உயரம், 8072 சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு, இந்த கட்டட நிறைவுச் சான்று தேவையில்லை.ஆனால் ஆயிரம் சதுர அடியிலான, வணிக கட்டடத்துக்கும் கட்டட நிறைவுச் சான்று இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டும்.கிரன்பாய் என்பவர் தொடுத்த வழக்கில் (W.P.No. 14520/2017) ஐகோர்ட் வழங்கியுள்ள உத்தரவிலும், கட்டட நிறைவுச் சான்று பெற்ற கட்டடங்களுக்கு மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், சொத்துவரி விதிப்பு புத்தகத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் கடிதம் எழுதி, மின் வாரியத்துக்கே 'ஷாக்' கொடுத்தார்.மின்வாரியம் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.சட்ட விதிகள் கூறுவதென்ன?மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், குடியிருப்புகளுக்கு 7 ஆயிரம் சதுரஅடி வரையிலும், வணிக கட்டடங்களுக்கு 2000 சதுரஅடி வரையிலும், மட்டுமே திட்ட அனுமதி வழங்க முடியும்.இத்தகைய கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளால் கட்டட நிறைவுச்சான்று தரப்படுவதில்லை. ஆனால் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களுக்கும் சொத்துவரி விதித்து புத்தகம் தரப்படுகிறது.அதிலும் குறிப்பாக, மாநகராட்சியில் முற்றிலும் அனுமதியே பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கும், 100 சதவீதம் விதிமீறல் கட்டடம் என்று கூறி, கட்டடம் முழுமைக்கும், அபராதத்துடன் சொத்துவரி விதிக்கப்படுகிறது.அதேபோன்று, விதிமீறல் கட்டடத்துக்கும் அதன் அளவிற்கேற்ப அபராதம் விதித்து, சொத்துவரி புத்தகம் தரப்படுகிறது.ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக விதிமீறியும், அனுமதியின்றியும் கட்டப்படும் எந்தக் கட்டடத்துக்கும், உள்ளூர் திட்டக்குழுமம் போன்ற அதிகார அமைப்புகள் கட்டட நிறைவுச்சான்று தருவதில்லை.
கட்டாயம் என்ன?
அப்படியிருக்க, அரசாணை, கோர்ட் உத்தரவுகளை மீறி, மின் இணைப்பு வழங்குமாறு மின் வாரியத்துக்கு, கமிஷனர் கடிதம் எழுத வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆளும்கட்சியினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆதரவுடன், கோவை நகரில் கடந்த சில ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான வணிக கட்டடங்கள், அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளன.அவற்றில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்து வருவதாகவும், பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. ஐகோர்ட் இதில் தலையிட்டு, ஆய்வு நடத்த உத்தரவிடவேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X