பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றை அறிய...

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

''கொரோனா தொற்றை கண்டறிய, 'ஹாப்பி ஹைபாக்சியா' எனும் புதிய மருத்துவ முறை தற்போது பின்பற்றப்படுகிறது,'' என்கிறார் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சூரஜ்குமார்.கொரோனா காலத்தில், இதய நோயாளிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன?இதய நோயாளிகள், சர்க்கரை உள்ள இதய நோயாளிகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்தவர்கள், கவனமாக இருக்க வேண்டும். இவர்களை கொரோனா எளிதாக தொற்ற வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது.இவர்கள், ரெகுலர் பி.பி., சுகர் செக்கப் செய்து கொண்டு, தவறாமல் மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். வெளியே போவதை தவிர்க்க வேணடும். வீட்டுக்குள் இருந்தபடி முடிந்த உடற்பயிற்சியை செய்யலாம்.கொரோனா அறிகுறியை கண்டறிவதில், புதிய முறை ஏதாவது உள்ளதா?இப்போது 'ஹாப்பி ஹைபாக்சியா' என்ற புதிய முறை உள்ளது. இதன்படி, உடலில் ஆக்சிஜன் அளவு, 93க்கு கீழே வரக்கூடாது. அதற்கு கீழ் குறைந்தால், மூச்சுத்திணறல் ஏற்படும். ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, 70க்கு கீழ் வந்தால் கூட, மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்படும் போது, அவர்களை காப்பாற்றுவது கடினமாகும். அதனால் 'ஹாப்பி ஹைபாக்சியா' என்ற, புதிய முறையில் கண்டறியப்படுகிறது. வீட்டில் ஒரு பல்ஸ் ஆக்ஸ் மீட்டர் வாங்கி வைத்து கொள்ளலாம். பல்ஸ் 93க்கு கீழே இருந்தால் டாக்டரை பார்க்க வேண்டும். இதய கோளாறு உள்ள, சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள ரிஸ்க் என்ன?சாதாரணமாக அட்டாக் வந்தால் வலி இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டாக் வந்தால் வலி இருக்காது. அறிகுறிகளை வைத்துதான், தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு அதிகமாக வியர்ப்பது, நடக்கும் போது அதிகம் மூச்சு வாங்குவது, படபடப்பு ஏற்படுவது ஆகியவை மாரடைப்பு அறிகுறிகள். உடனே டாக்டரை பார்க்க வேண்டும். இதய கோளாறு உள்ள சர்க்கரை நோயாளிகள், அதிக கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'சாட்டின்' மாத்திரைகள் சாப்பிடுவதால், பின் விளைவு வருமா?மாரடைப்பு வந்தவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும். இந்த மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைபடிதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பாதிப்பு வராது.மாரடைப்புக்கு கொழுப்பு தவிர வேறு காரணம் உண்டா?மாரடைப்புக்கு கொழுப்பு மட்டும் காரணமில்லை. வாழ்வியல் பிரச்னைகள், முறையற்ற உணவு பழக்கம், புகை, மது இப்படி பல காரணங்கள் உள்ளன. இதனால்தான் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. நினைத்த போதெல்லாம் உணவு சாப்பிடாமல், பசித்த போது சாப்பிட்டால் பிரச்னை இருக்காது. 40 வயதுக்கு பிறகு, முழு உடல் பரிசோதனை அவசியம். பிரச்னையை தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X