பொது செய்தி

தமிழ்நாடு

குரங்குகள் சேட்டையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை நகரில் உலா வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் கடந்த சில நாட்களாக, காலை, மாலை நேரத்தில் சிங்கவால் குரங்குகள், வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை அள்ளி செல்கின்றன. இதனால், வீட்டில் கதவு, ஜன்னல்களை கூட திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதுத்தோட்டம் வனப்பகுதியில் மட்டுமே காணப்பட்ட சிங்கவால் குரங்குகள் தற்போது நகருக்குள் உலா வரத் துவங்கியுள்ளன.வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், குரங்குகள் கூட்டம் நகரில் புகுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X