தக்காளிக்கு ஆதார விலை இல்லை: விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் அரசே கொள்முதல் செய்யும் வகையில் தக்காளி சாஸ் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என மடத்துக்குளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், தக்காளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், விலை அதிகரித்து இருந்ததால், கூடுதல் விலை கிடைக்கும் என நம்பிக்கையில், பல நுாறு ஏக்கர்
 தக்காளிக்கு ஆதார விலை இல்லை: விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

மடத்துக்குளம்:தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் அரசே கொள்முதல் செய்யும் வகையில் தக்காளி சாஸ் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என மடத்துக்குளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், தக்காளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், விலை அதிகரித்து இருந்ததால், கூடுதல் விலை கிடைக்கும் என நம்பிக்கையில், பல நுாறு ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து சந்தைக்கு வரத்து உள்ளதால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:இந்த மாத தொடக்கத்தில், ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, சந்தைகளில் கிலோ, 10 ரூபாய்க்கு தான் விலை கிடைக்கிறது. சந்தை விலை நிலவரத்தை விட, குறைவாகத்தான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.எதிர்பார்த்த விலை கிடைக்காததால், பல இடங்களில் அறுவடை செய்யாமல் கால்நடைகளுக்கு உணவாக விட்டு விட்டோம். சிலர் மார்க்கெட் கொண்டு சென்று, உரிய விலை கிடைக்காததால் ரோட்டோரம் கொட்டிச் செல்கின்றனர்.ஆண்டுதோறும் இதே பிரச்னையில் விவசாயிகள் சிக்கி திணறுகின்றனர். இதற்கு தீர்வாக, தக்காளிக்கு அரசு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அல்லது இந்த பகுதியில் தக்காளி சாஸ் தொழிற்சாலை ஆரம்பித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X