தடகள வீரர்கள் பயிற்சி பெற அனுமதி! தேசிய அளவில் வென்றவர்களுக்கு முன்னுரிமை | Dinamalar

தமிழ்நாடு

தடகள வீரர்கள் பயிற்சி பெற அனுமதி! தேசிய அளவில் வென்றவர்களுக்கு முன்னுரிமை

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
கோவை:'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தவும், பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை நீக்கப்பட்டு, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.குறிப்பாக, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 'ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட்
தடகள வீரர்கள் பயிற்சி பெற அனுமதி! தேசிய அளவில் வென்றவர்களுக்கு முன்னுரிமை

கோவை:'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தவும், பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை நீக்கப்பட்டு, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 'ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அதாரிட்டி ஆப் தமிழ்நாடு' அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, சர்வதேச தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற முகமது சலாவூதீன், சிவா அன்பரசி ஆகிய இருவரும் கோவை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
என்னென்ன விதிமுறைகள்
15 வயதுக்கு உட்பட்டோர், 50 வயதுக்கு மேற்பட்டோர் பயிற்சிக்கு தடை. உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கு தடை நீடிப்பு. வீரர்கள் பயிற்சியின் போது, அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வீரர்கள், பயிற்சியாளர்கள் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு, தனியாக பயிற்சி வழங்கப்பட வேண்டும்.இதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த, சில தினங்களாக சர்வதேச தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற முகமது சலாவூதீன், சிவா அன்பரசி ஆகியோர், நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.சில தனியார் பயிற்சி மையங்களின் பயிற்சியாளர்கள், தங்களிடம் பயிற்சி பெறும் வீரர்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டுமென, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாருக்கெல்லாம் அனுமதி
கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,''கோவை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு சர்வதேச வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் பயிற்சிக்கு 'ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாடு' அனுமதி வழங்கியுள்ளது. தேசிய மற்றும் மாநில போட்டிகளில் பதக்கம் வென்று, வரும் நாட்களில் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறிப்பாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு விதிகளின் படியும், பின்னர், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கினால் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X